அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு!

மதுரையில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, ரெம்டெசிவர் மருந்துகளைக் கொண்ட 8 பெட்டிகள் திடீரென திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை…

மதுரையில் உள்ள அரசு கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து பெட்டிகள் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் நோயாளிகளுக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, ரெம்டெசிவர் மருந்துகளைக் கொண்ட 8 பெட்டிகள் திடீரென திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து மருத்துவமனையின் கீழ் செயல்படகூடிய மருந்துகள் சேமிப்பு கிடங்கில் பணிபுரிய கூடிய ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் காவல்துறையினர் தனிதனியாக விசாரணை நடத்தினர்.

மேலும், மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் காலிப்பெட்டிகளில் உள்ள கைரேகை குறித்து ஆய்வுசெய்தும் மதிச்சியம் குற்றபிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் ரெம்டெசிவர் மருந்துகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.