சென்னை கடற்கரை முதல் தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை பரங்கிமலை யார்டில் பொறியியல் பணி காரணமாக, கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
அதன்படி
- தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே நாளை காலை 9.08 மணி முதல் பிற்பகல் 3.20 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்,
- செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையே நாலை காலை 11.00 மணி முதல் மதியம் 2.20 மணி வரை இயக்கப்படும் ரயில்கள்,
- செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே நாளை காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
- காஞ்சிபுரம் – சென்னை கடற்கரைக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,
- திருமால்பூர் – சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அதேபோல் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே, நாளை காலை 10.56, முற்பகல் 11.40, நண்பகல் 12.20 மற்றும் 12.40, மதியம் 1.45, பிற்பகல் 2.15 மற்றும் 2.30 ஆகிய நேரத்தில் இயக்கப்படும் ரயில்கள்,
- சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணிவரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ரத்து செய்யப்படும் ரயில்களுக்கு பதிலாக, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 1 மணி நேரத்திற்கு ஒரு பயணிகள் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.







