பெரியகுளம் பகுதியில் தொடர் மழை பெய்ததால் இயற்கை காளான் விளைச்சல்
அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
.
தேனி மாவட்டம், பெரியகுளம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், தொடர் மழை
பெய்திருப்பதால் இயற்கைக் காளான் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இக்காளான்களை பறித்துச் சென்று உணவுக்காகப் பயன்படுத்துகிறார்கள்.
செயற்கையில் பல்வேறு காளான்கள் உற்பத்தியானாலும், இயற்கை மண்வெட்டிக் காளான், மொட்டுக் காளான், குடைவிரி காளான், தவிட்டுக் காளான் என்ற வகைதான் காளான் வகைகளில் மிகவும் பிரசித்தம். காளான்கள் இளக்கமான மண் இருக்கும் கரிசல் வயல்வெளிகளிலும், செம்மண் அடர்ந்த காடுகளிலும், குளிர்ச்சியான மாந்தோப்புப் பகுதிகளிலும், கரையான் புற்றெடுக்கும் இடங்களிலும், இது அதிகமாக உற்பத்தியாகும்,
நல்ல மழை பெய்து தரைப்பகுதி குளிர்ச்சி அடைந்தவுடன் காளான் கரு உற்பத்தியாகி விடும். பருவ மழை பெய்யும் காலத்தில் இடி ,மின்னலுடன், மழை பெய்த உடனே காளான்கள் தரைப்பகுதியில் இருந்து வெடித்துக் கிளம்பி தரைக்கு மேலே தெரியவரும். அப்போது தான் பறித்து உணவுக்காகப் பயன்படுத்தலாம்.
இயற்கை உணவுக்கு ஏற்ற, மாமிசம் போன்ற சுவையுடையது காளான் வகை. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே இயற்கைக் காளான் கிடைப்பதால் மக்கள், இயற்கைக் காளான்களை விரும்பி சமைத்து உண்ணுவதால் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி புரோத சத்து ஏற்பட வழிவகை செய்வதாலும், மாமிச வகை உண்ணாதவர்களுக்கு ஏற்ற சத்தான இயற்கைக் கறிவகையாகும்.
இயற்கைக் காளானுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால்,
மலர்ந்து குடை விரித்த காளான் ஒரு கிலோ ரூபாய் 500/= க்கும், மொட்டுக்காளான்
விலை ஒரு கிலோ ரூபாய் 600/ ஆகிய நல்ல விலைகளுக்கு சந்தையிலேயே விற்பனையாகிறது. இதனால் காடு, வயல், தோப்புகளில் வெடிக்கும் காளான்களை பறித்து வருபவர்களுக்கும் நல்ல விலை கிடைப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







