மூதாட்டியில் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த கொள்ளையர்களிடம் “ஏலே பித்தலை.. ஏலே பித்தலை “ என கத்தியதால் கொள்ளையர்கள் செயினை விட்டுச் சென்றனர்.
திருநெல்வேலி அருகே நாரணம்மாள்புரம் கிராம பகுதியில் மூதாட்டியிடம் செயின்
பறித்து சென்ற திருடனை பார்த்து “ஏலே அது பித்தளை.. ஏலே அது பித்தளை என மூதாட்டி கத்தியுள்ளார்.
அதன் பின்னர் அந்த திருடன் பறித்து சென்ற செயினை விட்டுச் சென்றான். இந்த சம்பவத்தை எதார்த்தமாக விவரிக்கும் மூதாட்டி வீடியோ சமூக
வலைதளங்களில் தற்போது அனைவராலும் வெகுவாக பரப்பப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் : தாயில்லாமல் நானில்லை!!!
திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பகுதியைச் சார்ந்த சேர்ந்தவர் மூதாட்டி கணபதி. மூதாட்டி தனது வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்துள்ளனர் .
பாட்டி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஏலே இது பித்தளை.. ஏலே
இது பித்தளை என கூச்சலிட்டுள்ளார். இதனால் திருடர்கள் விரக்தியில் பறித்த செயினை போட்டு விட்டு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தனக்கு நேர்ந்த சம்பவத்தை உள்ளூர் சக மக்களிடம் வட்டார மொழியில் பாட்டி விளக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் தற்போது பித்தளை செயினை தற்போது தங்க மூலாம் பூசி வைத்துள்ளதாக கூறுகிறார். திருநெல்வேலி வட்டார வழக்கில் எதார்த்தமாக நகைச்சுவை உரைநடையில் மூதாட்டி தனக்கு நடந்த நிகழ்வு விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
– யாழன்







