கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய இரண்டு அரசுப் பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார்.
கரூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்”
என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள் இருவர்
ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சரளமான
ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினர்.
இதையும் படிக்க: நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் மோடிதான் பொறுப்பேற்க வேண்டும் – திருமாவளவன்
கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கம்பீரமாக எடுத்துரைத்த மாணவிகளைப் பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இருவருக்கும் புத்தகங்களைப் பரிசளித்தார்.
-ம.பவித்ரா








