இந்தியாவில் நிலவும் வேலை வாய்ப்பின்மைக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் பேரவையின் பொதுச் செயலாளர்
சந்திரபோஸின் படத்திறப்பு, நினைவேந்தல் மற்றும் இதழ் வெளியிட்டு விழா ஐந்திணை மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் விடுதலை
சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவன், சந்திரபோஸின் படத்தை திறந்து வைத்ததோடு, இதழையும் வெளியிட்டார்.
இதையும் படியுங்கள் : தாயில்லாமல் நானில்லை!!!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “தமிழ்நாட்டிற்கு வரும் வடமாநில தொழிலாளர்கள், வேலைவாய்ப்பின்மை காரணமாகவே வருகிறார்கள் என்றால், அந்த வேலைவாய்ப்பின்மைக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் நேர்மையாக விசாரணை நடத்துவார்கள் என்றும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.







