தாயில்லாமல் நானில்லை!!!

இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம். கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள்…

இனிய பாடல்கள், சிறந்த திரைப்படங்களை தந்து மறைந்தாலும் நமது நினைவில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரையும், பார்த்து வருகிறோம்.

கண்களும் காவடிச் சிந்தாகட்டும்… உள்ளத்தின் கதவுகள் கண்களடா… பொன்மகள் வந்தாள்… மலருக்‍குத் தென்றல் பகையானால்… ஆடலுடன் பாடலைக்‍கேட்டு… தாயில்லாமல் நானில்லை… என காலத்தால் என்றும் அழியாத இனிய பாடல்களை தந்தவர் ஆலங்குடி சோமு.

சில நேரங்களில் குடும்பச் சூழ்நிலைகள் கூட கவிதை எழுதத் தூண்டிவிடும் வகையில் அமைந்து விடுகிறது. ஆலங்குடி சோமுவுக்கும் அப்படித்தான். முதல் மனைவி மரணமடைந்த நிலையில், தன்னைப்பற்றியும் தன் பிள்ளைகளைப் பற்றியும் பெண் தெய்வம் என்ற திரைப்படத்தில் தாயொரு பக்கம் என்ற பாடலை எழுதியிருப்பார்.

இதையும் படியுங்கள் : மனிதீ ஸ்பெஷல்: துர்கா பாய் காமத் கதை

எம்ஜிஆர் நடித்த ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ஆடலுடன் பாடலைக்‍கேட்டு என்ற பாடல் எழுதப்பட்டதும், பஞ்சாப்பின் பாங்ரா நடனத்தில் பாடலை படம்பிடிக்‍க விரும்பினார்கள். ஆனால், எம்ஜிஆரோ, இந்தப் பாடலுக்‍கான ஆட்டத்தை முறைப்படி, கற்றுத்தேர்ந்து ஆடவேண்டும் என நினைத்தார். இதற்காக அவர் இத்தகைய ஆட்டங்களில், மிகப்பிரபலமாக இருந்த நடிகை விஜயலட்சுமியை அழைத்துப் பயிற்சி பெற்றார்.

அதே படத்தில், ஆலங்குடி சோமு எழுதிய மற்றொரு பாடல் துள்ளுவதோ இளமை என்ற பாடல். இந்தப் பாடலுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட மெட்டுக்கு ஏற்றபடி, ஆலங்குடி சோமு எழுதிய பாடலை அப்போதே சுவிட்சர்லாந்தின் பிரபல காளை விளையாட்டை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கப்பட்டது. அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் ஹிட் பாடலான தாயில்லாமல் நானில்லை பாடலை எழுதியதும் ஆலங்குடி சோமுதான். சிவாஜி நடித்த சொர்க்கம் திரைப்படத்தின் பொன்மகள் வந்தாள் பாடலும் ஆலங்குடி சோமுவின் மற்றொரு ஹிட் பாடலாகும்.

கருப்பு வெள்ளை படக்காலத்தில் தொடங்கிய ஆலங்குடியின் திரையுலகப் பயணம் வண்ணப்படங்கள் வraத் தொடங்கிய பின்னரும் நீடித்தது. அந்த வகையில் சப்பாணி, பரட்டை, மயில் என கிராமத்துக் கதாபாத்திரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய 16 வயதினிலே திரைப்படத்தில் மஞ்சக்குளிச்சி பாடலை எழுதியது கவிஞர் ஆலங்குடி சோமுதான்..

வாழ்வாங்கு வாழ்ந்த கவிஞர் ஆலங்குடி சோமு, 1990-ம் ஆண்டு, ஜூன் மாதம் 6-ந் தேதி மரணமடைந்தார். எல்லையில்லா இனிமை கொண்ட பல பாடல்களைப் எழுதி, இன்றளவும் நமது மனங்களில் கொலு வீற்றிருக்கும் கவிஞர் ஆலங்குடி சோமுவின் நினைவுகள் என்றென்றும் மறையாது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.