திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ளது. 5 இடங்களை கொண்டுள்ள காங்கிரஸின் அளித்ததால் தவெகவின் பலம் 113 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் இடதுசாரிகளும் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து பரீசிலித்து வருவதாக கூறப்படுகிறது.
கூட்டணி கட்சிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, திருச்சி சிவா, கனிமொழி, பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுக சட்டமன்றக் குழு தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகளின் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். இச்சந்திப்பின் போது அவரசப்பட வேண்டாம் என்றும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவறுத்தியதாக கூறப்படுகிறது.







