தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து திமுக 59 இடங்களும் அதிமுக 47 இடங்களும் வென்றுள்ளன.
பெரும்பான்மைக்கு குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பியுள்ளது.
இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படுகிறது.
தவெகவிற்கு அதிமுக ஆதரவு அளிக்க உள்ளதாக வெளியான தகவல் வெளியாகிருந்தது. ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, அந்த தகவல் தவறானது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக- திமுக கூட்டணி அமைத்தால் திமுகவின் 59 தொகுதியும் அதிமுகவின் 47 இடங்களும் சேர்த்து அக்கூட்டணி 106 இடங்கள் பெரும். தொடர்ந்து இரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சம்பதிக்கும் பட்சத்தில் இக்கூட்டணி ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளது.
இருந்த போதிலும் அதிமுக – திமுக கூட்டணி தொடர்பாக எந்த வித அதிகார்வபூர்வ தகவலும் இன்னும் வர வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







