வருமானவரித்துறை சோதனை நடைபெறும் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்கள்!

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார்…

திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எம்பி ஜெகத்ரட்சகன் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்த வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் 2016-ம் ஆண்டு ஏற்கனவே எம்பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தொடர்புடைய வருமானவரித்துறை சோதனை நடைபெறும் இடங்கள்:

அடையாறு வீடு.

தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள அலுவலகம்.

அடையாறு எல்பி சாலையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு.

தியாகராய நகர் அக்கார்டு ஹோட்டல்.

அண்ணாநகர் கிழக்கு 5 வது மெயின் ரோட்டில் உள்ள பரணி சுபலாஷ் அடுக்குமாடி குடியிருப்பு.

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை.

பாலாஜி பல் மருத்துவமனை.

வேளச்சேரி அலுவலகம்.

ஸ்ரீபெரும்புதூர் தண்டலத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் கல்லூரி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் தேவரியம்பாக்கத்தில் உள்ள மதுபான ஆலை.

சென்னை அமைந்தகரை அய்யாவு காலனியில் உள்ள ஆடிட்டர் வீடு

புதுச்சேரி அகரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.