ஆசிய விளையாட்டுப்போட்டி: வில்வித்தை மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளின் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது. வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கெளர் ஆகியோர் குழு…

ஆசிய விளையாட்டு போட்டிகளின் வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

வில்வித்தை மகளிர் குழுப் போட்டியில் இந்தியா சார்பில் ஜோதி சுரேகா, அதிதி கோபிசந்த், பிரணித் கெளர் ஆகியோர் குழு வியாழக்கிழமை பங்கேற்றது.

சீன தைபே அணிக்கு எதிரான இந்த போட்டியில் 230 புள்ளிகள் பெற்று இந்திய மகளிர் அணியினர் வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.