வீட்டுப்பணிப் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்: பல்லாவரம் எம்எல்ஏ-வின் மகனை பிடிக்க தனிப்படை!

வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.  பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ…

வீட்டுப் பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன் ஆன்டோ மதிவாணன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.  இவரது மனைவி மெர்லினா. இவர்கள் வீட்டில் பட்டியலின இளம் பெண் ஒருவரைக் கடந்தாண்டு முதல் வேலைக்கு இருந்தார். இந்த பெண்ணை திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகள் மெர்லினா தாக்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து,  இந்த விவகாரம் தொடர்பாக திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  எஸ்சி/எஸ்டி சட்டப்பிரிவுகள்,  ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேர் உட்பட 20 பேர் கைது! 

இந்த நிலையில்,  ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் ஆகியோர் தலைமறைவானதை தொடர்ந்து,  அவர்களை பிடிக்க சென்னை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் மெர்லினை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.