அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையத்தின் பயிற்சித் துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இந்த மையத்தின் சார்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய வனப்பணி முதன்மைத் தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்களுக்கு வருகிற 17ம் தேதி மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், இன்று முதல் வரும் 15-ம் தேதி மாலை 5 மணி வரை http://www.civilservicecoaching.com கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்ப விவரங்களை அவசியம் பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டாயம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், 15ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண் வாயிலாகவும், 9345766957 என்ற வாட்ஸ்-அப் எண் மூலமாகவும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







