பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் கொண்டு வருவார் : டாக்டர் வரதராஜன்

மகளிருக்கு தனி காவல் நிலையம், மகளிர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் வாக்குறுதி அளித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் தீவிர வாக்கு…

மகளிருக்கு தனி காவல் நிலையம், மகளிர் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொள்ளாச்சி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் வாக்குறுதி அளித்துள்ளார்.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி லே-அவுட், பத்ரகாளி அம்மன் கோயில் மற்றும் அமைதி காலனி உள்ளிட்ட பகுதிகளில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்த அவர், திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வருவார் என உறுதி அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.