சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 15 நாட்கள் நடைபெறும் விழாவில் நேற்று சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று பகல் 11.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் வைபவம் வெகு விமர்சியாக நடைபெற்றது . பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணை பிளக்க தங்கத்தினாலான திருமாங்கல்யம் தெய்வானைக்கு சூட்டப்பட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை காலை 5:45 மணிக்கு நடைபெற உள்ளது திருமண விழாவில் மதுரை திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழா கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.