ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.224 குறைந்ததுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரமாகக் குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.224 குறைந்ததுள்ளது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரமாகக் குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 2,24 குறைந்து ரூ.33,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,174- ஆக விற்பனைச் செய்யப்படுகிறது.

இதற்கு முன் கடந்த மார்ச் 26-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.112 குறைந்து ரூ.33,728 -ஆக விற்பனைச் செய்யப்பட்டது. அதேபோல் கடந்த 23-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.128 ரூபாய்க்குக் குறைந்து ஒரு பவுன் ரூ.33,824 -ஆக விற்பனைச் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் இல்லாத அளவிற்கு இன்று தங்கத்தின் விலை வெகுவாக குறைந்திருக்கிறது. பண்டிகை கால தொடக்கத்தில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.