திருநெல்வேலியில் தந்தை, மகன் கொலை – கனிமொழி எம்பி கண்டனம்!

வீரவநல்லூர் அருகே தந்தையும், அவரது மகனும் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தையும் அவரது 5 வயது மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு முழுவதும் சீர்கெட்டுவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு என்ற ஒன்றே இல்லாமல் ஆகிவிட்டது. தவெக அரசு, முன்விரோதம் காரணமாகத் தொடரும் இப்பிரச்சனையில் மெத்தனமாக செயல்படாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, அப்பகுதியில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.