தவெக ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் : இயக்குநர் அமீர் வலியுறுத்தல்..!

தவெக ஆட்சி அமைக்க, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ந்து திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏ-களின் ஆதரவு தேவைப்படும் விசிக, இடதுசாரிகளிடம் ஆதரவு கோரி தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளதாவது;

தவெக ஆட்சி அமைக்க, விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்க வேண்டும். சகோதரனாக, தந்தை ஆக விஜயை அவர்கள் வழி நடத்த வேண்டும். தவெக ஆட்சி அமைக்க இவர்கள் ஆதரவு அளிக்காவிட்டால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரும் அல்லது வேறு மாற்று கட்சியை விஜய் அணுகுவார்.அதற்கு இடம் தராமல் மக்கள் பெரும்பான்மையாக ஏற்றுக்கொண்ட விஜய்க்கு விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்க வேண்டும்.

அந்த கூட்டணியில் இருந்து ஓட்டு வாங்கியவர் இந்த கட்சிக்கு ஆதரவா..? என சிலர் கேட்கலாம். நாட்டில் பலர் அணி மாறி இருக்கிறார்கள். சூழ்நிலை உணர்ந்து தங்கள் கொள்கையுடன் இருக்கிற, பாஜக பக்கம் போகாத விஜய்க்கு விசிக, கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக்க வேண்டும். விசிகவும், கம்யூனிஸ்ட்களும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தவெக தலைமையில் ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.