முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த ஜூன் 20ம் தேதி நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அவதூறாகப் பேசுதல், அமைதியைக் குலைத்து மோதலைத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் மனுவை நீதிபதி அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன் ஜாமின் மனு தள்ளுபடியான நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.