வாழப்பாடி அருகே சின்னப்பனாயக்கன் பாளையத்தில் வங்காநரியை பிடித்து வந்து கிராம மக்கள் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சின்னப்பனாயக்கன் பாளையம் மற்றும்
பேளூர், பெத்தநாய்க்கன்பாளையம், உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் பொங்கல்
பண்டிகையின் போது வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வந்து கோவிலை
சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தை மாத முதல் நாள் நரி முகத்தில் முழித்தால் விவசாயம் மற்றும் செல்வம் செழிக்கும் என்பதால் இதனை ஐதிகமாக வழிபட்டு வருகின்றனர். இதனையடுத்து சேலம் வனத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வரக்கூடாது. பிடித்து வந்து பொங்கல் பண்டிகை கொண்டாடினால் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் அபராதம் மற்றும் 10 வருடம் சிறந்த தண்டனை கிடைக்கும் என எச்சரித்து இருந்தனர் .
ஆனால் வனத்துறையினர் உத்தரவையும் மீறி இன்று வாழப்பாடி அருகே உள்ள
சின்னப்பனாயக்கன் பாளையம் கிராமத்தில் சிலர் வனப்பகுதியில் இருந்து வங்காநரியை பிடித்து வந்தனர். பின்னர் வங்காநரியை கூண்டில் அடைத்து பூஜை செய்து கோவிலை
சுற்று ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர், அப்போது பெண்கள் வங்கா நரியை
ஆராத்தி எடுத்து உறசாகமாக வழிபட்டனர். இந்த விழாவில் திரளான பொதுமக்கள்
பங்கேற்று வங்காநரியை வணங்கி சென்றார்கள்.