கடலூர் தென்பெண்ணை ஆற்றில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
தை மாதம் ஐந்தாம் நாள் ஆற்றுத்திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி கடலூர் தென்பெண்ணையில் ஆற்றுத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்விழாவுக்கு கடலூர், முதுநகர், புதுநகர், தாழங்குடா, மஞ்சகுப்பம், பாதிரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களின் உற்சவர்கள் கொண்டு வரப்பட்டன. இதனையடுத்து ஆற்றில் அந்த உற்சவ சாமிகளுக்கு புனித தீர்த்தவாரி நடைபெற்றது.
இதேபோல், கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற ஆற்று திருவிழாவில், திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்க்கு சிறப்பு மகா தீபாராதனை நடந்தது.
இதில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.