ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் பெங்களூரு, குஜராத், ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகாரில் தற்போது தொடங்கி உள்ள வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஐதராபாத் அணி, 4-வது இடம் பெற்ற ராஜஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்கிறது. இப்போட்டியில் வெல்லும் அணி அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான ‘தகுதிச்சுற்று 2’க்கு தகுதிபெற்று, அதில் குஜராத் அணியை எதிர்கொள்ளும். இதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.
இவ்விரு அணிகளும் இந்த சீசனில் 2 முறை லீக்கில் மோதி இருக்கின்றன. இரண்டு ஆட்டங்களிலும் முறையே 57 ரன்கள், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும். சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் ஐதராபாத்தும், 9-ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.







