“கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?” – கொலையில் முடிந்த வாக்குவாதம்!

இந்தோனேஷியாவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.…

இந்தோனேஷியாவில் கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற வாக்குவாதம் கொலையில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சமீபகாலமாக மதுபோதையில் கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிறிய பிரச்னைகளுக்கு கூட கொலை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  இதே போன்று இந்தோனேஷியாவில் முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? என்ற வாக்குவாதம் முற்றி நண்பரைக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் கதிர் மார்க்கஸ் மற்றும் டிஆர்.  இவர்கள் இருவரும் நண்பர்கள்.  இந்த நிலையில்,  டிஆர் மது அருந்துவதற்காக கதிர் மார்க்கஸை அழைத்திருக்கிறார்.  இதனையடுத்து இருவரும் ஒன்றாக மது அருந்தினர்.  அப்போது, போதை தலைக்கேறிய நிலையில் டிஆர், “கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா?” என்று கேள்வி எழுப்பினார்.

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? ஒருவழியா பதில் கிடைச்சிருச்சு! - News7 Tamil

இருவருக்குமிடையே சாதாரணமாக தொடங்கிய இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கதிர் மார்கஸ் இதுகுறித்து விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்குச் செல்ல முயன்றார்.  இதனால்,  ஆத்திரமடைந்த டிஆர், கதிர் மார்க்கஸை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.  பின்னர் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து டிஆர் என்பவரை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.