இலங்கை – இந்தியா 2வது ஒருநாள் போட்டி : இலங்கை அணி பேட்டிங்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய…

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய நிலையில், தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 231 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணி, 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.