தமிழ் நாட்டின் பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு சென்ற அவர்கள் அடுத்ததாக நேபாளம் கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகாமனா கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு பிரார்த்தனை செய்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 16 பேர் கொண்ட பேருந்தானது பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனை தொடர்ந்து உள்ளூர்வாசிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த பயணிகளை இடிபாடுகளில் இருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையின் தகவலின் படி, இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் அருகிலுள்ள சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.







