பாரிஸ் ஒலிம்பிக் : இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.  பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி…

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி காலிறுதி ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. 

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் 100 ஆண்டுகளுக்கு பிறகு 2024ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய சார்பில் பல வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். தற்போதுவரை இந்தியா 3 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி  பிரிட்டனை வீழ்த்தி அரையிறுத்திகு முன்னேறியுள்ளது. இதன் மூலம் அரையிறுதி போட்டியில் ஜெர்மனி அல்லது அர்ஜென்டினாவை இந்திய அணி சந்திக்கும்.

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவும், பிரிட்டனும் தலா ஒரு கோல் அடித்தன. இதனால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. தொடர்ந்து நடந்த ஷூட் அவுட் முறையில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி  4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.