ஜெயலலிதா படத்தை அழிக்க வேண்டும் என திமுக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்ததால் அதிமுகவினர் உட்பட பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி ஊராட்சியில் மறைந்த
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அதிமுக கட்சியினர் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்களை எழுதி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் ஜெயலலிதாவின் சுவர் விளம்பரங்களை பார்த்த அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் விளம்பரங்களை எழுதிக் கொண்டிருந்த நபர்களை அழைத்து மிரட்டி இந்த சுவரில் எழுதி இருக்கிற அனைத்து விளம்பரங்களையும் அளிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும் எச்சரித்தோடு மட்டுமல்லாமல் அருகில் நின்று இதை அழித்தே ஆக வேண்டும் நான் திமுகவை சேர்ந்தவன் என்றும் என் ஊராட்சி பகுதியில் இந்த விளம்பரங்களை எழுத கூடாது என்றும் அராஜகம் செய்து அங்கேயே நின்று அதை அழிக்க செய்த நிகழ்வு அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையும் படியுங்கள் : யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்.? பகீர் தகவல்கள்
மேலும் தங்களை திமுகவினர் அச்சுறுத்தியதாக கூறி அதிமுக கட்சியினர் ஒன்று திரண்டு
நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உடனே வந்த காவல்துறையினர் சமரச
பேச்சுவார்த்தை நடத்தி அதிமுகவினரை கலைந்து செல்லும்படி வலியுறுத்தினர்.
– யாழன்