முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அதானி குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை: மத்திய அரசின் சீலிடப்பட்ட கவர் பரிந்துரையை நிராகரித்தது உச்சநீதிமன்றம் .!

அதானி நிறுவன பங்கு மோசடி விவகாரத்தில், ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கான செபியின் பரிந்துரை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு தாக்கல் செய்த பரிந்துரையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதானி நிறுவன பங்கு மோசடி விவகாரத்தில், ஹிண்டன்ப்ர்க் அறிக்கை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது மத்திய அரசு மற்றும் செபி அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஹின்டன்பர்க் அறிக்கை தொடர்பான விசாரணைக்கான செபியின் பரிந்துரையை சீலிட்ட கவரில் நீதிபதிகளிடம் வழங்கினார்.

பின்னர் அது தொடர்பாக தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு ஆலோசனை நடத்தியது. அப்போது மத்திய அரசு தரப்பில் அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விசாரணைக்கு நீதிபதி ஒருவரின் தலைமையிலான குழு அமைக்கலாம். யார் அந்த நீதிபதி என்பதை நீதிமன்றம் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மத்திய அரசின் சீலிட்ட கவர் பரிந்துரையை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்ததோடு, சீலிட்ட கவரில் நிபுணர்கள் பரிந்துரையை வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். மத்திய அரசின் குழுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக இருக்கக் கூடாது. வேண்டுமானால் சீலிட்ட கவரில் உள்விவரங்களை பொதுவில் மத்திய அரசு முன்வைக்க வேண்டும். ஆனால் இறுதி முடிவை நீதிமன்றம் செய்யும் எனவும் கூறினர்.

இதனை தொடர்ந்து குறுகிய கால பங்குகள் குறித்து பொதுநல மனு தாக்கல் செய்துள்ளீர்கள் அதை விளக்க முடியுமா? என மூத்த வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மாவிடம் நீதிபதிகள் கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்து குறுகிய கால பங்குகள் முறையை எம்.எல்.ஷர்மா விளக்கினார்.

பின்னர் குறுக்கிட்டு பேசிய மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் விதிகளை மீறி 75% பங்குகளை அதானி நிறுவனமே வைத்துள்ளது. அதை வெளிநாடுகளில் உள்ள offshore shell நிறுவனங்களில் முதலீடு செய்து சந்தையில் பங்குகளின் மதிப்பை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். எனவே அறிக்கையின் அடிப்படையில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, சந்தை அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து பேசிய தலைமை நீதிபதி, மத்திய அரசு மட்டுமல்ல எந்த தரப்பிடம் இருந்து பெயர்கள் பரிந்துரை பெறப்போவதில்லை. நீதிமன்றம் பெயர்களை இறுதி செய்யும். சீலிட்ட கவரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பெயர்களை வெளியிட வேண்டாம். அதானி விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வேண்டுமானால் குழு அமைக்கலாம். பதவியில் இருக்கும் நீதிபதியை நியமிக்க இயலாது. உச்சநீதிமன்றம் அமைக்கும் நிபுணர்கள் குழுவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறிய நீதிபதி சந்திரஷூட், அதானி குழுமம் பங்குகள் முறைகேடு தொடர்பான வழக்குகள் மீதான உத்தரவைக்கும் ஒத்திவைத்தார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பேரன்பின் ஆதி ஊற்று”…நா.முத்துகுமார் பிறந்தநாள் இன்று

EZHILARASAN D

கே.எல்.ராகுலுக்கு காயம்; கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா?

G SaravanaKumar

தனியார் பள்ளிகளை ஆய்வு செய்ய திடீர் உத்தரவு

Web Editor