ஐதராபாத்திலிருந்து தமிழகத்திற்கு 1.4 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் வந்தடைந்தன.
நாட்டில் கொரோனா பரவல் 2 வது அலை பாடாய்ப்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் தடுப்பூசிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.
இவை தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் சென்னையில் உள்ள மருத்துவ குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.