அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இந்த தொற்றால் பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கை உயரவே, மருத்துவமனைகளில் ஆக்சிஜென் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரிசெய்யும் விதமாக, அரசு மருத்துவமனைகளில்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதன்படி, ஹூண்டாய், டிவி,எஸ், எல் அண்ட் டி, செயிண்ட் கோபெயின் உள்ளிட்ட 8 நிறுவனங்கள், ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு, கோவை, பொன்னேரி, திருநெல்வேலி உள்ளிட்ட 13 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒரு மாத காலத்திற்குள் இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.







