அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை, விரைந்து அனுமதிக்க கூடுதலாக 120 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்,…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, ஆம்புலன்சில் வரும் கொரோனா நோயாளிகளை, விரைந்து அனுமதிக்க கூடுதலாக 120 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக, அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா தொற்று சிகிச்சை வசதிகள் மற்றும் தடுப்பு நடவடிக்ககளை குறித்து, அமைச்சர் சேகர் பாபு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் மருத்துவமனையில், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையிலேயே, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுவதாகக் கூறினார்.

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எந்த நோயாளிகளும் உயிரிழக்கவில்லை, எனக் குறிப்பிட்ட அவர், கொரோனா தொற்றால் உயிரிழக்கும் நோயாளிகளின் உடலை அடக்கம் செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க, 3 மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.