எழுத்தாளர் கி.ராவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு:முதல்வர் ஸ்டாலின்!

பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது…

பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி.ராஜநாராயணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99. கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படும் கி.ராவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்த முதல்வரின் ட்விட்டர் அஞ்சலி பதிவில்“கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழ்ந்து தேம்புகிறார். கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! எழுத்தாளர் கி.ராவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும். குடும்பத்தினர் – வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என முதல்வர் தன்னுடைய பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.