முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சூறாவளி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
முதல், இரண்டு கட்ட தேர்தல் பரப்புரையை நிறைவு செய்த அவர், மூன்றாம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார். கரூர், அரவக்குறிச்சி, வேடச்சந்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொள்கிறார்.
இதை தொடர்ந்து நாளை மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார். சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாளும் பரப்புரையில் ஈடுபடுகிறார்.







