தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
“திறனற்ற அறிவாலயம் ஆட்சி முடிய இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கிறது” என்று மக்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அந்த நிம்மதியைக் கூட நீடிக்க விடாது, தினந்தோறும் தினுசு தினுசான குற்றங்கள் நடந்து, தமிழக மக்களின் அச்சத்தை மேன்மேலும் கூட்டுகின்றன.
பட்டப்பகலில் காவலர்களும் வழக்கறிஞர்களும் சூழ்ந்திருக்கும் நீதிமன்ற வளாகத்தில் நீதியரசருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், பாமர மக்களுக்கு எப்படி பாதுகாப்பிருக்கும்? ஆட்சியின் இறுதிகட்ட நாட்கள் வரை வெற்று விளம்பர அறிவிப்புகளை வெளியிடுவதில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு, சட்டம் ஒழுங்கைக் கடைக்கண் கொண்டுகூட கவனிக்காத திமுக அரசைத் தப்பித்தவறி கூட மீண்டுமொரு முறை ஆட்சி அமைக்க விடமாட்டார்கள் தமிழக மக்கள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







