முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் கார்த்தி சிதம்பரம் பரப்புரை

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறவும், தேர்தல் பணி குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்துகொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களைச் அந்த கார்த்தி சிதம்பரம் பேசியதாவது, “எங்களது கூட்டணி மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி வாய்ப்பைப் பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பத்தாண்டு காலமாக இருந்த அதிமுக ஆட்சி மாற்றப்பட வேண்டும். அதற்கு மாற்றாக திமுக கூட்டணிதான் வரமுடியும், பாஜக என்பது நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, அக்கட்சியின் நிழல் இல்லாத ஆட்சிதான் தமிழகத்தில் அமையும்.

பாஜகவின் இந்துத்துவா கொள்கையை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், தமிழ் இனத்துக்கும் தமிழ் அடையாளத்திற்கு எதிரி கட்சிதான் பாஜக, அந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுகவை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…

Arivazhagan Chinnasamy

திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க பரிசீலனை: முதலமைச்சர் ஸ்டாலின்

Halley Karthik

கிரிக்கெட்: நெஞ்சில் பந்து விழுந்ததில் மாணவர் பலி

Halley Karthik