”தவறி வந்த வார்த்தை….” திரிஷா குறித்த கருத்திற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்…!

திரிஷா குறித்த சர்ச்சை கருத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகை திரிஷா குறித்து கூறிய கருத்துகள் சர்சையை உண்டாகின. அவரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இன்று நடிகை திரிஷா வழக்கறிஞர் மூலம் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது திரிஷா குறித்த கருத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,  என்னுடைய அரசியல் வாழ்க்கையை பொருத்தவரையில் தனிநபர் விமர்சனங்களை நான் அனுமதிப்பதும் இல்லை பேசியதும் இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த வார்த்தை…

இது தொடர்பாக பாஜக அகில இந்திய தலைவி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களும்  முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களும்  என்னிடம் பேசினார்கள்.

உண்மையிலேயே இதில் யாரேனும் வருத்தப்படுவார்கள் ஆனால் என்னுடைய வருத்தத்தை மனப்பூர்வமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.