ஏப்ரல் 6-ஆம் தேதி மாறுவோம் மாற்றுவோம் இது மாற்றத்திற்கான நாள் என திருத்துறைப்பூண்டியில் நாம் தமிழர் வேட்பாளர் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அடிப்படை அரசியல் கட்டமைப்பை மாற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என பேசிய சீமான், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஏப்ரல் 6ம் தேதி மாற்றத்திற்கான நாள் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.
மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.
ஒரு கட்சியில் இருந்து மாறி இன்னொரு கட்சி ஆட்சியில் அமர்த்துவது. இவ்வாறு மாற்றி மாற்றி கட்சியை அமர வைப்பது மாற்றமல்ல. அடிப்படை அரசியல் அமைப்பையே மாற்ற வேண்டும். நாங்கள் கட்டிடத்திற்கு வெள்ளை அடிக்க வந்த சீர்திருத்தவாதிகள் அல்ல. கட்டிடத்தை ஒட்டுமொத்தமாக அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட வந்த புரட்சிவாதிகள் என்றும், ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை கொண்டு வந்தே ஆகவேண்டும் என அவர் கூறினார்.