அசாம் முதலமைச்சர் வெளியிட்ட வெறுப்பு வீடியோ விவகாரம் ; உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்………….!

வெறுப்பு வீடியோ விவகாரத்தில் அசாம் முதமைச்சருக்கு எதிரான வழக்கில் மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இஸ்லாமியருக்கு எதிராக இருப்பதாக கூறி எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனை தொடர்ந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த வீடியோ தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் இந்த விவகாரத்தில் அசாம் முதலமைச்சர் பதவி ஏற்பு உறுதிமொழிக்கு எதிராக, அரசியல் சாசன அடிப்படையை பாதிக்கும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டுள்ளார் என்று வாதிடப்பட்டது.

மனுதாரர் வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், வெறுப்பு வீடியோ தொடர்பாக மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தனர். மேலும் அம்மனுவை விரைந்த விசாரிக்கவும் மாநில உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.