முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீட் விலக்கு மசோதா குறித்து ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பப்படும் – அமைச்சர் மா. சுப்பிரமணியம்

நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு
பணிகளை ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் 4.9 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் அரசு பன்னோக்கு மருத்துவமனையை இரண்டாவது முறையாக இன்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த பணிகள் செப்டம்பர் வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முதல்வரே தொடர்ந்து ஆய்வு செய்வதால் முன்கூட்டியே பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளபாதை, தூய்மைப் பணியாளர்களுக்கான இடம், பசுமை இடமாக வளாகத்தை வைப்பது உள்ளிட்ட பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியில் 209 கி.மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் துவக்கப்பட்டு 161கி.மீ பணிகள் மழை காலத்திற்கு முன்பே பயன்பாட்டிற்கு வந்தது. இதன் காரணமாக மழை நீர் தேங்கவில்லை பொது மக்களிடம் பாராட்டினை பெற்றது எனவும் மீதமுள்ள 48 கி.மீ பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சைதாபேட்டை தொகுதிக்குட்பட்ட வண்டிகாரன் தெரு, மசூதி தெரு, பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.

மழைக்காலத்தில் பாதிக்கப்பட்ட சாலைகள் சீர்செய்யும் பணி போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க முதலமைச்சர் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்த சீரமைக்கும் பணி என்பது இன்னும் நான்கு மாதத்திற்குள் நிறைவடையும். இன்று முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது கழிவுநீர் குடிநீரில் கலப்பதாகவும், தெரு நாய்களின் தொல்லை குறித்தும் புகார்கள் வந்தது. எனவே அதனை தடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீள்வதற்கு அரசுக்கு உறுதுணையாக
இருந்த அனைத்து அலுவலர்களுக்கும் வரும் 31ஆம் தேதி சென்னை மாநகராட்சி
அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது.

நீட் விளக்கு மசோதா குறித்து ஆயுஸ் அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள
நிலையில் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் விளக்கம் அனுப்பி வைக்கப்படும்” என்று
அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மலிவு விலையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி-மத்திய அமைச்சர்

Web Editor

இறுதிக்கட்டத்தில் உள்ள இலகு ரயில் சேவை பணிகள்!

Gayathri Venkatesan

பிசிசிஐ தலைவராக ரோஜர் பின்னி நியமனம்

G SaravanaKumar