ஒரே காரில் பயணித்த முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல்காந்தி!

முதலமைச்சர் விஜய் மற்று, ராகுல்காந்தி ஆகியோர் சென்னை பாலவாக்கத்தில் உள்ள கஃபேவுக்கு ஒரே காரில் சென்றனர்.

நீட் உள்ளிட்ட தேர்வுத்தாள் கசிவுகள், கல்விக் கட்டண உயர்வு மற்றும் வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக பேசி வருகிறார். இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் நாசிக், மத்தியபிரதேசம் மாநிலம், இந்தூர் உள்ளிட்ட இடங்களில் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக ராகுல்காந்தி, மாணவர்களிடம் உரையாடினார்.

இந்த நிலையில் சென்னை தீவுத்திடலில் மாணவர்கள் குரல் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மான்வர்களுடன் ராகுல் காந்தி பேச உள்ளார். இதற்காக டெல்லியில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கடியினர் உற்சாக் அவரவேற்பு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் விஜய் இல்லத்திற்கு சென்ற ராகுல்காந்தி அவருடன் சிமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதலமைச்சர் விஜய் ராகுல்காந்திக்கு மதிய உணவு அளித்தார்.

இதனையடுத்து முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் ஒரே காரில் பாலவாக்கம் சென்று அங்குள்ள தேவாலயம் மற்றும் அதன் அருகில் உள்ள முதியோர் இல்லத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து மாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான கஃபேவுக்கு சென்று காஃபி அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.