“டெல்லியில் அறிவிக்கப்படாத அவசரநிலை” – அபிஜித் தீப்கே கைதுக்கு கனிமொழி கண்டனம்!

அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலை உருவாக்கி டெல்லியை ஒரு கோட்டையாக மத்திய அரசு மாற்றியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி போராட்டம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள சிஜேபியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்திறங்கினார். அப்போது டெல்லி போலீசார் அவரி விமானத்க்திலேயே கைது செய்தனர். மேலும், பிரபல யூடியூபர் ‘துருவ் ரத்தி’ உட்பட 500-க்கும் மேற்பட்ட சிஜேபியினர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் அபிஜித் தீப்கே கௌது செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி அமைதியான முறையில் போராடிய CJP அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை, விமானத்திற்குள்ளேயே வைத்துத் தடுத்து வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

45 மெட்ரோ நிலையங்களை மூடியும், 250-க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்தும், இணையச் சேவையைத் துண்டித்தும், 25,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் குவித்தும், அறிவிக்கப்படாத அவசரநிலைக் காலச் சூழலை உருவாக்கி டெல்லியை ஒரு கோட்டையாக மத்திய அரசு மாற்றியுள்ளது. ‘பாதுகாப்பு’ என்ற காரணத்தைக் காட்டி, அரசியலமைப்பின் 19-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை என்றால், பிறகு ஜனநாயகத்தில் எஞ்சியிருப்பதுதான் என்ன?

அபிஜீத் டிப்கே உள்ளிட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரலை ஒடுக்கிவிட முடியாது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.