கக்கன் திரைப்பட டிரெய்லரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கக்கன். இவர் தமிழகத்தில் 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். இவரின் 116-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கடந்த ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் கக்கனில் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது.
கக்கன் திரைப்படத்தை சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தை சேர்ந்த ஜோசப் பேபி தயாரித்துள்ளார். “கக்கன்” திரைப்பட ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்சியில் அமைச்சர்கள் துரைமுருகன் , சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி , காங்கிரஸ் எம் எல் ஏ .ஈவிகேஸ் இளங்கோவன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கக்கன் படத்தின் டிரெய்லர் மற்றும் ஒலிநாடாவை வெளியிட்டார்.







