துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு!

துருக்கியில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டிருந்த நிலையில் பூமிக்கு அடியில் சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது.

நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கார் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் மக்கள் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ, கட்டிட இடிபாடோ ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.