மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் 4-வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன. மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக…

மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரையும், மாநிலங்களவை 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டன.

மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி வெளியானது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே (ஜூலை 20)மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இதே போல் அடுத்த நாளும் இதே விவகாரம் எழுப்பப்பட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில் நேற்று மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் நோட்டீஸ் அளித்திருந்தன. ஆனால் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும், மாநிலங்களவையும் நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

இன்று மக்களவை கூடியதும் மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து அவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவை கூடியதும், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நேற்று கூறியதாகவும், இந்த விவகாரத்தில் எம்பிக்கள் இடையே இருவேறு கருத்துகள் உள்ளதால் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என ஆம் ஆத்மி எம்பி ராகவா சதா கேட்டுக்கொண்டார். அவரின் கோரிக்கையை ஏற்க அவைத்தலைவர் ஜக்தீப் தன்கர் மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.