GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று 3-வது நாளாக சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,760-க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,18,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது. வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.