அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி. ஜே அப்துல் கலாமின் திருவுருவ சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் 21 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள்
குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜெ. அப்துல் கலாமின் 7 அடி வெண்
திருவுருவச் சிலையினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
செலுத்தினார். பின் புதிதாக திறக்கப்பட்ட அப்துல் கலாம் சிலையின் முன்பு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டடு அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் மு.க ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் , சேகர் பாபு, எ.வ வேலு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர்.







