திமுக ஆட்சியின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வி அடைந்துள்ளதை அரசுப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின் போது அளித்த 505 வாக்குறுதிகளின் தற்போதைய நிலை குறித்த ‘Report Card’ இதோ.

விவசாயம், சட்டம் ஒழுங்கு, மகளிர் பாதுகாப்பு எனப் பிரதான துறைகள் அனைத்திலும் இந்த அரசு தோல்வியடைந்துள்ளதை அரசுப் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் இந்த ALLFAIL அரசாங்கத்தின் உண்மை நிலையை இக்காணொளி வாயிலாக மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.