இஸ்ரேலுக்கு ஆதரவாக 2-வது விமானம் தாங்கி போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா!…

இஸ்ரேலுக்கு ஆதரவாக 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 9ம் நாளாக நீடித்து வரும்…

இஸ்ரேலுக்கு ஆதரவாக 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 9ம் நாளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. மேலும், இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக்கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

இந்த போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இந்த போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகிறது. 2 அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நிலைநிறுத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.