இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா செஸ்ஸபில் மாஸ்டர் இறுதிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனை எதிர்கொண்டு ரன்னராக நிறைவு பெற்றுள்ளார்.
இந்நிலையில், பிரக்ஞானந்தாவின் செஸ் விளையாட்டுத் திறனைப் பாராட்டும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அவருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.
பிரக்ஞானந்தாவுக்கு 16 வயதே நிறைவடைந்துள்ளதால் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், 18 வயது நிறைவடைந்தவுடன் நிரந்தரமாகப் பணியமர்த்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







