முக்கியச் செய்திகள்

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1, 2 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் முதன்மை எழுத்துத் தேர்வான கட்டாய தமிழ் மொழித் தாள் தகுதித் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் மற்ற தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்களால் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுகளுக்கும் இது பொருந்தும். 40 சதவீத்துக்கு கீழ் குறைபாடுகள் உடைய மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கும் விலக்கு பொருந்தும்.

இவ்விலக்கைப் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் உரிய மாற்றுத் திறனாளி சான்றிதழ் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

படகு கவிழ்ந்து விபத்து; 16 மணி நேரம் நீந்தி கரைசேர்ந்த இலங்கை மீனவர்கள்

G SaravanaKumar

வளர்ச்சி கொள்கை குழுவுக்கு முதலமைச்சரின் முக்கிய அறிவுறுத்தல்.

EZHILARASAN D

தென்காசி மாவட்டத்தில் கார் நெல் சாகுபடி பணிகளுக்காக 4 நீர் தேக்கங்கள் திறப்பு!

Jeba Arul Robinson